
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் ஷில்பி என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி அஜய் என்ற கணவரும் 4 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். இதில் ஷில்பி கடந்த 3 வருடங்களாக கள்ளக்காதலில் இருந்துள்ளார். இவர் பிரதீப் என்பவருடன் உறவில் இருந்த நிலையில், பிரதீப் தன் கள்ளக்காதலியிடம் கணவனை பிரிந்து தன்னுடன் வந்துவிடுமாறு கூறியுள்ளார். ஆனால் ஷில்பி போக மறுத்த நிலையில் கடந்த 11ஆம் தேதி அவருடைய கணவர் வேலைக்கு சென்ற பிறகு அவளுடைய வீட்டிற்கு பிரதீப் சென்றுள்ளார்.
அப்போது கணவன் மற்றும் மகனை விட்டுவிட்டு தன்னுடன் வருமாறு பிரதீப் கூறியுள்ளார். ஆனால் ஷில்பி மறுத்ததால் இருவருக்கும் இடையே தகறாறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பிரதீப் அவருடைய 4 வயது மகன் கண் முன்னே கழுத்தை நெரித்து கொலை செய்தார். இந்த கொலையை நேரில் பார்த்த அவருடைய மகன் காவல்துறையினரிடம் நடந்த அனைத்தையும் கூறினார். மேலும் இதைத் தொடர்ந்து காவல்துறையினர் பிரதீப்பை கைது செய்தனர்.