சீனாவின் ஷாங்காய் பகுதியை சேர்ந்த யான் என்ற 41 வயது பெண் மூன்று வருட சிகிச்சைக்கு பின் IVF மூலம் கருவுற்றிருந்தார். இந்நிலையில் அவரது வீட்டிற்கு வந்த பார்சலை வாங்குவதற்காக யான் வெளியில் வந்த சமயம் லி என்பவருக்கு சொந்தமான வளர்ப்பு நாய் யான் மீது பாய்ந்துள்ளது. இதில் யானுக்கு வயிற்றில் வலி ஏற்பட்டு அவரது கரு கலைந்து விட்டது.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான யான் இந்த சம்பவத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றார். அங்கு வழக்கை விசாரித்த நீதிபதிகள் நாயை சங்கிலியில் கட்டாதது உரிமையாளரின் தவறு என்பதை சுட்டிக்காட்டி யானுக்கு இழப்பீடாக 90 ஆயிரம் யுவான் அதாவது இந்திய மதிப்பில்10,63,652.40 ரூபாயை இழப்பீடாக கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.