
KPY பிரபலம் பாலா தன்னால் இயன்ற உதவிகளை உதவி தேவைப்படுபவருக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி செய்து வருவதுடன் அதை தனது சமூக வலைதளங்களில் வீடியோவாக பதிவிட்டும் வருகிறார். இந்நிலையில் தான் சம்பாதிக்கும் பணம் முழுவதையும் இப்படியே நல்லது செய்வதற்காக செலவழிக்கிறீர்களே எப்படி இந்த மனது உங்களுக்கு இருக்கிறது என கேட்கப்பட்ட கேள்விக்கு பாலா இவ்வாறு பதிலளித்தார். அதில், நான் ஏராளமான கஷ்டங்கள் அனுபவித்துள்ளேன்.
எனக்கு பின்னால் நடிகர் லாரன்ஸ் அவர்கள் உதவியாக இருந்து தற்போது செயல்பட்டு வருகிறார். நான் சொந்தமாக நடிக்கும் பணத்தில் சமூக வலைத்தளங்கள் வாயிலாக எனக்கு விளம்பரங்கள் மூலம் வரும் பணத்தை கொண்டு நான் உதவி செய்கிறேன் ஒரு காலகட்டத்தில் மூன்று வேளை சாப்பிட்டால் போதும் என்பதே எனது உயர்ந்த கனவாக இருந்தது. அது தற்போது நிறைவேறிவிட்டது. எனவே அது போக மீதம் இருக்கும் பணம் அனைத்தையும் மக்களுக்கு தொண்டு செய்ய பயன்படுத்துவேன் என தெரிவித்துள்ளார்.