
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் வசித்து வந்தவர் 42 வயதான அரசு அதிகாரி. இவர் கேரளாவில் உள்ள கொச்சியில் உள்ள அரசு துறை ஜிஎஸ்டி பிரிவில் பணிபுரிந்து வந்துள்ளார். அவருடன் அவரது சகோதரி (35) மற்றும் தாயாரும் (80) வசித்து வந்துள்ளனர். அவரது சகோதரி ஜார்கண்ட் மாநில நிர்வாக சேவை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அந்த அரசு அதிகாரி மற்றும் அவரது தங்கை, தாயார் ஆகியோர் கொச்சியில் உள்ள அவர்களது சொந்த வீட்டில் இறந்து கிடந்ததாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்த அறிந்த காவல்துறையினர் அங்கு சென்று பார்த்த போது மூவரும் தனித்தனி அறையில் இறந்து கிடந்துள்ளனர். மேலும் அவரது தாயார் ஒரு படுக்கையில் படுத்த வண்ணம் இறந்து அவரது உடல் முழுவதும் சந்தன நிற துணியால் மூடப்பட்டு அதன் மீது மலர்கள் வைக்கப்பட்டு இருந்தன. மேலும் அவரது தலைக்கு அருகில் மூன்று பேரும் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது. இவ்வாறு சம்பவ இடத்தை சோதனை நடத்திய காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மூவரும் இறந்து 4, 5 நாட்களுக்கு மேல் இருக்கலாம். உடல்கள் அழுகிய நிலையில் உள்ளன எனவும் தெரிவித்தனர். மேலும் சோதனையில் இந்த அதிகாரியின் ஆவணங்கள் அனைத்தையும் UAE யில் வசிக்கும் மற்றொரு சகோதரரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ள கடிதம் சிக்கி உள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த விசாரணையில் PSC தேர்வுகள் நடத்துவதில் முறைகேடுகள் தொடர்பான CBI வழக்கில் JSP அதிகாரிகளில் இவரும் ஒருவர் இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வீட்டில் இந்தியில் எழுதப்பட்ட சில டைரி குறிப்புகளும் கிடைத்துள்ளது. நாங்கள் அதனை தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறோம். என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.