
மத்தியபிரதேஷ் மாநிலம், இந்தூரில் பெண் ஒருவர் 13 நாட்களில் 3 திருமணம் செய்து 15 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக தகவல் வெளிவந்துள்ளது. அந்தப் பெண் முதலில் மும்பையைச் சேர்ந்த திபேஷ் என்பவரை போலி ஆவணங்கள் கொடுத்து திருமணம் செய்துள்ளார்.
சிறிது காலம் கழித்து, அவர் அவரை விட்டுப்பிரிந்து ராஜஸ்தானை சேர்ந்த லக்ஷ்மணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அந்தப் பெண் ஒவ்வொரு திருமணமான 3 நாட்களுக்குள், அவளும் அவருடைய போலி உறவினரும் பணத்துடன் காணாமல் போனார்கள். அந்தப் பெண்ணின் முதல் கணவன் அவரது ரகசிய காதலனை கண்டுபிடித்தார். அப்போது அவரிடம் கேட்ட போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது.
அதாவது அந்தப் பெண் புகார்தாரரை திருமணம் செய்து கொண்டது மட்டுமின்றி மேலும் பலரை திருமணம் செய்து கொண்டு அவர்களையும் அதேபோன்று ஏமாற்றியதாக காதலன் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த முதல் கணவன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பெண் உட்பட 4 பேரை கைது செய்தனர்.
பின்பு அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த கும்பல் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று மக்கள்களை ஏமாற்றி பெரும் அளவில் பணம் பறிக்க விரிவான திட்டங்களை பயன்படுத்தியுள்ளது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விரைவான விசாரணை நடத்தி வருவதோடு, இதில் மேலும் சம்மந்தப்பட்டவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.