திருச்சி மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரை பகுதியில் ஸ்ரீரங்கம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 3 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்து 1500 ரூபாய் பணம், சீட்டுக்கட்டு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.