கர்நாடக மாநிலம் கொப்பல் என்ற பகுதியில் பொதுமக்கள் மனுக்களை அளித்து தங்களுடைய குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் கூறும் நிகழ்ச்சி ஆனது சமீபத்தில் நடைபெற்றது. இதில் இந்த பகுதியிலுள்ள ஏராளமான மக்கள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களாக கொடுத்து வந்தார்கள்.

அப்போது அந்த வரிசையில் அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனக்கு 30 வயதுக்கு மேல் ஆகிவிட்டதாகவும் யாரும் தன்னை இதுவரை திருமணம் செய்து கொள்ள முன்வரவில்லை என்றும் கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். இதை பார்த்த மாவட்ட ஆட்சியர் விழுந்து விழுந்து சிரித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.