மதிமுக சார்பில் மாவீரர் நாள் வீரவணக்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு வைகோ பேசினார். அவர் பேசியதாவது, நான் 30 ஆண்டுகளாக திமுகவில் பணியாற்றிய போது 27 முறை சிறைக்கு சென்று வந்தேன்.

நான் திமுக கழகத்துக்காக உயிரையே தர தயாராக இருந்தேன். நான் மேடைக்கு மேடை திமுகவுக்கு ஆதரவாக முழங்கிய நிலையில் அந்த இயக்கத்திலிருந்து பின்னர் தான் வெளியேற்றப்பட்டேன் என்று வேதனையுடன் கூறினார். அதன் பிறகு விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை சந்தித்தது பற்றியும் வைகோ பகிர்ந்து கொண்டார்.

மேலும் திமுகவுக்காக தான் உயிரைக்கூட கொடுக்க தயாராக இருந்த நிலையில் என்னை கழகத்தை விட்டு வெளியேற்றி விட்டனர் என்று வேதனையுடன் வைகோ கூறியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.