மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வாகனம் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பமாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அவருடைய மருமகளே  சொத்துக்காக மாமனாரை கொலை செய்தது தெரியவந்தது. கடந்த மே 22ஆம் தேதி புருஷோத்தம் என்ற முதியவர் மீது கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த வழக்கில் கார் ஓட்டுநர் கைதாகி பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதுகுறித்த  சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினர் விசாரித்த பொழுது புருஷோத்தம் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது தெரிந்தது. மேலும் 300 கோடி ரூபாய் சொத்தை அடைவதற்காக அவருடைய மருமகளான அர்ச்சனா என்பவர்தான் கூலிப்படை ஏவி இந்த கொலை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து அர்ச்சனா மற்றும் அவருடைய கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.