இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் சமீபத்தில் ரீசார்ஜ் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தன. இந்த நிலையில் அரசுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தாமல் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதுவிதமான திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.
அதன்படி BSNL-ன் ரூ.797 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் சுமார் 300 நாட்கள் நீண்ட வேலிடிட்டியுடன் வருகிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு முதல் 60 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை இலவசமாகப் பெறுகிறார்கள். மீதமுள்ள 240 நாட்களுக்கு, உள்வரும் அழைப்புகள் மட்டுமே உங்களுக்கு கிடைக்கும். இதனை தொடர்ந்து அவுட்கோயிங் மற்றும் டேட்டா பெற விரும்பினால் டேட்டா வவுச்சர் மூலம் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.