காங்கிரஸ் எம்.பியும், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள இந்தியர்கள் மத்தியில் அடுத்தடுத்து உரை நிகழ்த்தி வருகிறார். அவர் கூறிய கருத்துக்கள் பாஜகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் கூறியதாவது, இந்தியாவில் ஒரு சீக்கியர் டர்பன் அணிவதற்கு அனுமதிக்கப்படுவாரா என்பதற்கும்? கதா அணிந்து கொண்டு குருத்துவாராவிற்கு செல்ல அனுமதி கிடைக்குமா என்பதற்கும் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவே இந்தியாவில் நடக்கும் போராட்டம். இது சீக்கியர்கள் பற்றியது மட்டுமல்ல.

எல்லா மதங்களையும் பற்றியது என தெரிவித்தார். ராகுல் காந்தியின் கருத்துக்கு பதிலடி கொடுத்த பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஆர்.பி சிங் கடந்த 1984 ஆம் ஆண்டு டெல்லியில் வைத்து 3000 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களின் டர்பன்கள் அவிழ்க்கப்பட்டு தலைமுடி வெட்டப்பட்டதோடு தாடியும் மழிக்கப்பட்டது. இது அனைத்தும் ராகுல் காந்தியின் குடும்பம் ஆட்சியில் இருந்தபோது நடந்தது. சீக்கியர்கள் பாதுகாப்பு இன்றி உணர்ந்த காங்கிரஸின் சொந்த வரலாறை மறந்து விட்டு ராகுல் காந்தி பேசியுள்ளார். இப்படி பேசினால் ராகுல் காந்தி மீது வழக்கு தொடர்வோம் என பதிலடி கூறியுள்ளார்.