
இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, நம்பிக்கையுடன் பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. அதில், எல்ஐசி ஜீவன் உமாங் பாலிசி (LIC Jeevan Umang Policy) என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. இந்த பாலிசி, 15, 20, 25, அல்லது 30 ஆண்டுகளுக்கான முதலீடு வாய்ப்புகளை வழங்குகிறது, மேலும் இது பயனருக்கு வருமானம் மற்றும் பாதுகாப்பு ஆகிய இரண்டு முக்கிய அம்சங்களைச் சேர்க்கிறது.
இந்த பாலிசி, 90 நாட்கள் முதல் 55 வயது வரையிலான நபர்களுக்கு திறந்திருக்கும். 100 வயதுவரை கவரேஜ் வழங்கும் இந்த திட்டம், முதிர்வு காலம் முடிந்த பிறகு ஆண்டுதோறும் நிலையான வருமானத்தை வழங்குகிறது. ஒருவரின் மரணத்தை அடுத்த தலைமுறைக்கு முழுத் தொகையும் வழங்கப்படும், மேலும், 100 வயதுவரை கவரேஜ் கிடைக்கும் என்பதன் மூலம், இந்த பாலிசி ஒரு தனித்துவமான பாதுகாப்பு கருவியாக மாறுகிறது.
எடுத்துக்காட்டாக, நீங்கள் உங்களுடைய 15 வயதில், 4.5 லட்சம் காப்பீடு தொகைக்கு ஜீவன் உமாங் பாலிசியை வாங்குகிறார்கள் என்றால், 15 ஆண்டுகள் ப்ரீமியம் செலுத்த வேண்டும். முழு ப்ரீமியத்தையும் செலுத்தினால் உங்களின் 31 வயதில் 36 ஆயிரம் ரூபாய் பெறலாம்.
மேலும், இந்த பாலிசி கீழ், 80C பிரிவில் வருமான வரி விலக்கு கிடைக்கிறது. சீரான வருமானம் மற்றும் நல்ல பாதுகாப்புடன், இந்த பாலிசி, கிராமப்புறங்களில் உள்ள மக்கள் மத்தியில் பரவலாக வரவேற்கப்படுகிறது. இதன் முழுமையான விவரங்களை அறிய, அருகிலுள்ள எல்ஐசி முகவர் அல்லது அலுவலகத்தை அணுகலாம்.