
இயக்குனர் அட்லீ ரூ 3000 கோடி வசூலை என்னால் சுலபமாக ஈட்ட முடியுமென தெரிவித்துள்ளார்.
சென்ற மாதம் வெளியான ஜவான் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. திரைப்படம் ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்த நிலையில், தமிழ் திரைப்படம் இதுவரை செய்யாத சாதனையை தமிழ் இயக்குனர் அட்லி செய்துள்ளார். ஆயிரம் கோடி வசூல் செய்த படங்களின் இயக்குனர்கள் பட்டியலில் தற்போது தமிழ் இயக்குனர் அட்லீ இணைந்துள்ளார். அதேபோல்,
2000 கோடி வசூல் செய்த ஒரே படமாக இந்தியாவின் தங்கல் திரைப்படம் இருந்து வரும் சூழ்நிலையில், ஒரு வேளை நான் பல நட்சத்திரங்களைக் கொண்டு ஒரு படத்தை இயக்க முற்பட்டால், அதில் ஷாருக்கான் சார் மற்றும் தளபதி விஜய் அண்ணாவை வைத்து இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் பட்சத்தில்,
என்னால் ரூ 3000 கோடிக்கும் மேல் வசூல் சாதனையை ஈட்ட முடியும். அந்த அளவிற்கு, எனது படைப்பு மிக பிரம்மாண்டமான ஒன்றாக இருக்கும். ஒருவேளை இது நடந்தால், கண்டிப்பாக நான் கூறியபடி, ரூ 3000 கோடி என்ற வசூலை மிக சுலபமாக என்னால் அப்படத்தை ஈட்ட வைக்க முடியும் என மிக தன்னம்பிக்கையுடன் கூறியுள்ளார். இது கோலிவுட் ரசிகர்களிடையே தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.