
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, முதல் முதலில் குடி என்றால் என்ன ? போதை என்றால் என்ன ? என தெரியாத தமிழனை, 1970 ஆகஸ்ட் 31 கல்லு கடையை திறந்து விட்டு தமிழின குடிக்க வச்ச குடி கெடுத்த குடும்பம் கருணாநிதியின் குடும்பமா ? இல்லையா ? யோசிச்சு பார்க்கணும். இருந்தாலும் ஓபன்னாக விவாதம் பண்ணுவோம்.
இன்னைக்கு அடுத்த தலைமுறை பற்றி பெற்றோர்கள், பெரியவர்கள் கவலைபடுகின்ற விதத்தில் தமிழ்நாடு போதைப்பொருட்களின் உறைவிடமாக மாறிப் போய் இருக்கிறது. ஆகவே அதை பற்றி இன்னைக்கு வரைக்கும் பேசல முதலமைச்சர்…. எங்க மாநிலத் தலைவர் மீது கேஸ் போடுறாராம். செக்ஷன் 49 அண்ட் 500 என்ன சொல்றதுன்னு ஸ்டாலின் அவர்களை எழுப்பி கேட்டால் சொல்லத் தெரியுமா ?
நீங்க உண்மையா பேசினால் அவதூறு இல்லை. இப்போ இந்த சாதிக்கா ? ஜாபர் ஜாதிக்… ஜாபர் ஜாதி எப்ப இருந்து போதைப் பொருள் கடத்தலில் இருக்காரு. 2006 இல் இருந்து 2006ல் கஞ்சா கடத்தி, வீடியோ பைரஸில் ஈடுபட்ட ஒரு ரவுடி, சமூக விரோதி.. அந்த சமூக விரோதியை வீட்டுக்கு கூப்பிட்டு, அவர் கிட்ட பரிசுகள் பெற்று, அவர திராவிட முன்னேற்றக் கழகத்தின் அயலார் பிரிவுக்கு மாவட்ட இணைச்செயலாளராக ஆக்கியது குற்றமா ? இல்லையா ? ஏனென்றால் இவருக்கு தெரியாது என்றால் பரவாயில்லை என தெரிவித்தார்.