இந்திய ரிசர்வ் வங்கி மார்ச் 31-ஆம் தேதி அனைத்து வங்கி கிளைகளும் திறந்திருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, அனைத்து வங்கிகளும் மார்ச் 31-ஆம் தேதி வங்கி நேரப்படி திறந்திருக்க வேண்டும். அந்நாளில் வாடிக்கையாளர்கள் சேவைகளையும் தடையின்றி வங்கிகள் வழங்க வேண்டும். குறிப்பாக வங்கி கிளைகளில் கவுண்டர் பரிவர்த்தனை சேவைகள் வழங்க வேண்டும்.

அதன் பிறகு NEFT, RTGS போன்ற ஆன்லைன் பரிவர்த்தனை சேவைகள் வழக்கம்போல் இரவு 12 மணி வரை செயல்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டு 2022-23 மார்ச் 31-ம் தேதியோடு நிறைவடையும் நிலையில், அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளர்கள் சேவைகளுக்கு மூடப்பட்டிருக்கும். வங்கிகள் திறந்து இருந்தாலும் வாடிக்கையாளர்கள் சேவை வழங்கப்படாது. ஆனால் இந்த நிதி ஆண்டில் மார்ச் 31-ம் தேதி வங்கிகள் வாடிக்கையாளர்கள் சேவைகளை வழங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.