அமெரிக்க நாட்டில் ஆலின் ஜான்சன் (57) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கெரிலின் ஜான்சன் (52) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 6 குழந்தைகள் இருக்கும் நிலையில் 32 வருடங்களாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இவர்கள் இருவரும் சமீபத்தில் தங்களுடைய 32-வது திருமண நாளை சிறப்பாக கொண்டாடினர்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் சம்பவ நாளுக்கு முந்தைய தினம் இரவு பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சேர்ந்து சாப்டுபால் விளையாடியுள்ளனர். இந்நிலையில் மறுநாள் திடீரென ஆலின் தன்னுடைய மனைவியை சுட்டு கொன்றுவிட்டு அவரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர்களின் இறப்புக்கான காரணம் தெரிய வராத நிலையில் ஆலினுக்கு சற்று மனநலம் பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.