
கனடாவை சேர்ந்த மார்டின் என்ற 43 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் 34 பெண்களுடன் பாலியல் உறவை மேற்கொண்டு அவர்களின் அனுமதி இல்லாமல் வீடியோ எடுத்துள்ளார். இதில் பெரும்பாலானோர் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் ஆவர். இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் மார்டினை சில நாட்களுக்கு முன்பு கைது செய்த விசாரித்தனர்.
அவர் மீது மிரட்டி பணம் பறித்தல் மற்றும் தடை செய்யப்பட்ட ஆயுதம் வைத்திருத்தல் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு யாராவது இருந்தால் தங்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது