தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நாஞ்சிக்கோட்டை பகுதியில் ஆரோக்கியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 70 வயது ஆகும் நிலையில் ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரிடம் 34 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் செல்போன் மூலமாக 15,000 கடன் கேட்டுள்ளார். ஆனால் அவர் பாலியல் ரீதியாக பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அழைப்பை துண்டித்தார். இருப்பினும் அவர் தொடர்ந்து தொடர்பு கொண்டு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார்.

ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த அவர் செல்போனில் ஆபாசமாக பேசியதோடு அந்த பெண்ணின் வீட்டிற்கு நேரடியாகவே சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில் பாதிக்கப்பட்ட பெண் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் அந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து ஆரோக்கிய சாமியை கைது செய்துள்ளனர்.