கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் பைத்தியம் வெறி பிடித்த தெரு நாய் ஒன்று, பல்வேறு இடங்களில் 35க்கும் மேற்பட்ட மக்களை கடித்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் சிறுவர், நடைபயணிகள், பேருந்து நிறுத்தங்களில் காத்திருந்தவர்கள், வீட்டின் மொட்டைமாடியில் நின்றவர்கள் என பலர் அடங்குகின்றனர். கடைசியாக, பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர், அந்த நாயை அடித்து கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

காயமடைந்தவர்களில் ஒருவர் கடுமையான முகப் பகுதிக் காயத்தால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், மேலும் மூவருக்கு கண்ணூர் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள அனைவரும் கண்ணூர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு மருத்துவத்துறை, மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியதோடு, இந்த சம்பவத்தை தொடர்ந்து உரிய எதிர்ப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.