சீன நாட்டில் உள்ள புஜியன் மாகாணத்தில் ஒரு பெண் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே 13 வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில் 37 வார கர்ப்பிணியாக இருந்துள்ளார். இவருக்கு திடீரென வீட்டில் பனிக்குடம் உடைந்து பிரசவ வலி வந்துள்ளது. இதனால் அவருடைய 13 வயது மகன் ஆம்புலன்ஸ்க்கு தொடர்பு கொண்ட விஷயத்தை கூறியுள்ளார். ஆனால் ஆம்புலன்ஸ் வர தாமதமான நிலையில் அந்த பெண்ணுக்கு பிரசவ வலி அதிகரித்து விட்டது. இதனால் அந்த சிறுவன் டாக்டர் சென் சாயாஷூனின் என்பவருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தன்னுடைய தாயின் நிலைமையை பற்றி கூறினான்.

பின்னர் அந்த மருத்துவர் சொன்ன அறிவுரைப்படி சிறுவன் தன் வீட்டில் வைத்தே தாய்க்கு பிரசவம் பார்த்தான். அவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் வீட்டிற்கு வந்து விட்டனர். பின்னர் அவர்கள் தாயையும் குழந்தையையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் நலமாக இருப்பதாக கூறினார்‌. மேலும் இது குறித்த செய்தி தற்போது சீன ஊடகங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் பலர் இதனை பாராட்டினாலும் பலர் இது ஆபத்தான ஒன்று என்று விமர்சித்து வருகிறார்கள்.