முல்லான்பூரில் நடைபெற்ற ஐபிஎல் 2025 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் தொடக்க வீரர் பிரியாஷ் ஆர்யா தனது முதல் சதத்தை அடித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இடதுகை வீரரான அவர், முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே லைஃபைன் பெற்றதும் அதனை முழுமையாக பயன்படுத்தி, வெறும் 39 பந்துகளில் சதம் அடித்து அணிக்கு வலுவான தொடக்கத்தை வழங்கினார். அவர் 7 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸ்கள் அடித்து ரசிகர்களை ரசிக்க வைத்தார்.

பிரியாஷ் ஆர்யா, ஐபிஎல் வரலாற்றில் முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்த வரிசையில் சேர்ந்த நான்காவது வீரராகிறார். அவருக்கு முன்னர் விராட் கோலி, நமன் ஒஜா மற்றும் பில்சால்ட் மட்டும் இதை சாதித்துள்ளனர். கலீல் அக்மத்திடம் இருந்து வந்த முதல் பந்தில் சிக்ஸ் அடித்த ஆர்யா, அடுத்த பந்திலேயே அவுட் ஆகும் நிலை உருவானபோதும், கலீல் ஒரு எளிய கேட்ச் தவற விட்டார். இதை தொடர்ந்து, ஆர்யா வெறும் 19 பந்துகளில் அரைசதம் அடித்து, பஞ்சாப் அணிக்காக பிளேயில் அரைசதம் அடித்த ஐந்தாவது வீரராக பெயர் பெற்றார்.


2024-ம் ஆண்டு டெல்லி பிரீமியர் லீக்கில், சவுத் டெல்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடிய பிரியாஷ் ஆர்யா, நார்த் டெல்லி ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு எதிராக ஒரே ஓவரில் 6 சிக்ஸ்கள் அடித்து கவனம் பெற்றார். அந்த ஆட்டத்தில் 120 ரன்கள் குவித்த அவர், தனது அணிக்கு 308/5 என்ற மிகப்பெரிய ஸ்கோரை அளித்தார். சயீத் முஷ்தாக் அலி கோப்பையில் டெல்லி அணிக்காக அதிக ரன்கள் குவித்தவர் ஆனார். கடந்த வாரம் வான்கடே மைதானத்தில் உத்தரப்பிரதேசத்திற்கு எதிராக SMAT சதம் அடித்தார்.

 

2024 ஆம் ஆண்டின் ஐபிஎல் ஏலத்தில் அவரது பெயர் பட்டியலில் இருந்தாலும் யாரும் அவரை தேர்வு செய்யவில்லை. ஆனால், அவரது அண்மைய அதிரடி ஆட்டங்களைத் தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் அவரை ரூ.3.8 கோடிக்கு வாங்கியது. தனது ஐபிஎல் அறிமுக சீசனில் தனது சிறந்த அதிரடி ஆட்டத்தினால் பிரியாஷ் ஆர்யா தற்போது ரசிகர்களின் புதிய ஹீரோவா வலம் வருகிறார். அவரது வெற்றிக்குப் பின்னால் இருக்கும் பொறுமை மற்றும் பாடுபட்ட பயணமே அவரை இந்த உயரத்திற்கு கொண்டு வந்துள்ளது.