கர்நாடகாவில் மும்மொழி கொள்கையை நிறைவேற்றுவதற்காக ஹிந்தி மூன்றாவது மொழியாக கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த SSLC தேர்வில் ஹிந்தி தேர்வு மூன்றாம் மொழி பாடம் என்ற வகையில் நடைபெற்றது. இந்த தேர்வில் 90,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. எனவே கல்வியாளர்கள் சிலர் மும்மொழிக் கொள்கையின் அடிப்படையில் இந்தி மூன்றாவது மொழியாக கற்பிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் அது மாணவர்களின் எதிர்காலத்திற்கு எந்த வகையிலும் பயனளிப்பதாக இல்லை என்றும் அவர்களின் அறிவை வளர்க்க ஹிந்தி மொழி பங்களிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டி உள்ளனர். அதோடு மாணவர்கள் எதிர்காலத்தில் பயன்பெறும் வகையில் தொடர்புடைய ஒன்றை தேர்வு செய்யாமல் மாநில அரசு மூன்றாம் மொழியான இந்தியை எதற்காக கட்டாயப்படுத்துகிறது என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து பேராசிரியர் நிரஞ்சனா ராதிகா கூறும்போது, மூன்றாவது மொழியாக ஹிந்தியை கற்பதால் மாணவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதனால் அவர்கள் தாய்மொழி மற்றும் இரண்டாம் மொழியான ஆங்கிலத்தை கற்பதில் கவனம் சிதறுகிறது. எனவே அரசாங்கம் தாய்மொழி மற்றும் ஆங்கில கல்விக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும், அதுவே அவர்களின் கல்வி மற்றும் தொழில் முறை சார்ந்த எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.