சிவகங்கை மாவட்டம் வலையபட்டியை சேர்ந்தவர் அழகு மீனா. 39 வயதாகும் இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முருகன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு வேதா ஸ்ரீ என்ற ஆறு மாத பெண் குழந்தை இருந்தது. முருகன் நிலங்களுக்கு கம்பி வேலை அமைக்கும் பணி செய்துவரும் நிலையில் கடந்த நான்கு நாட்களாக வேதா ஸ்ரீ அழுது கொண்டே இருந்துள்ளார். அழகு மீனா தனது பிள்ளையை மருத்துவரிடம் அழைத்துச் சென்றும் பலன் இல்லை.

இந்த நிலையில் நேற்று அதிகாலை மகள் வேதா ஸ்ரீயை அழைத்துக் கொண்டு அழகுமீனா கண்மாய் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு தன் மீதும் பிள்ளை மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். இருவரது அலறல் சத்தம் கேட்டும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை விட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. அழகு மீனா மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.