நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் நடிப்பில் கடந்த ஜூன் 27ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் கல்கி 2898 AD. இந்த திரைப்படம் தொடர்ந்து வசூலை குவித்து வருகிறது.

இந்த படம் வெளியான முதல் மூன்று நாட்களில் முறையே ரூ.191.5 கோடி, ரூ.298.5 கோடி, 415 கோடி வசூலி திறந்த நிலையில் நான்கு நாட்களில் 500 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விரைவில் ஆயிரம் கோடியை தாண்டும் எனக் கூறப்படுகிறது.  இந்த திரைப்படம் தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மகாபாரத கதையை பிரமாதனமான காட்சி அமைப்புகளால் எடுத்துள்ளது அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. குறிப்பாக இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் இரண்டு காட்சிகளில் மட்டுமே வந்தாலும் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.