திருநெல்வேலி மாவட்டம் கடம்பன் குளத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் (28). இவரது மனைவி புவனேஸ்வரி (26). இந்த தம்பதியினருக்கு ஆர்த்திகா(8), ரித்திகா(6), முத்து நவீஷா(3), வைதிகா (2) என்ற நான்கு பிள்ளைகள் உள்ளனர்.

இந்த நிலையில் ராஜேஷ் கண்ணன் வேறு திருமணம் செய்ய போவதாக புவனேஸ்வரியிடம் அடிக்கடி கூறியுள்ளார். இது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த புவனேஸ்வரி தனது 4  குழந்தைகளுக்கும் அரளி விதையை அரைத்து கொடுத்துள்ளார்.

அதன் பிறகு புவனேஸ்வரியும் அரளி விதையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்த ராஜேஷ் கண்ணன் மனைவியும் குழந்தைகளும் விஷம் சாப்பிட்டதை அறிந்து தோட்டத்திற்கு சென்று பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் மயங்கி கிடந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.