
மும்பை அருகே பத்லாபூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 4 வயது சிறுமி 2 பேர் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்கு சென்ற சிறுமிகள் தூய்மை தொழிலாளியாள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து சிறுமிகள் அவர்களது பெற்றோரிடத்தில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறினார். இதனால் பெற்றோர்கள் இச்சம்பவத்தை பற்றி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.
ஆனால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க காலதாமதம் ஆக்கினர். இதற்கிடையே இந்த தகவல் நகரம் முழுவதும் பரவியதால் பந்த் நடத்துவதற்காக ஊர் மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து பத்லாபூர் ரயில்வே நிலையத்தில் உள்ளூர் மக்கள்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ரயில்வே நிலையத்தில் ரயில்கள் நிறுத்தப்பட்டதோடு பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.
