
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள சித்தூர் பேருந்து நிலையத்தில் கடந்த 18ஆம் தேதி அன்று பெண் உட்பட 4 பேர் வந்திருந்தனர். அவர்கள் உயிருடன் இருந்த ஆளுயர பாம்பை கழுத்தில் தொங்கவிட்டு பிச்சை எடுத்துள்ளனர். இதனை கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்நிலையில் இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது, இது போன்ற விலங்குகளை வைத்து பிச்சை எடுப்பது சட்டப்படி குற்றம். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக நாங்கள் விசாரித்து வருகிறோம் என்று கூறினர். இச்சம்பவம் பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.