திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேட்டை அசோகர் தெருவில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் இளவரசன் டாஸ்மாக் பாரில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணகி இளவரசன் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். நேற்று முன்தினம் அப்பகுதியில் இருக்கும் பெருமாள் கோவில் அருகே இளவரசன் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த ஒரு கும்பல் கத்தி மற்றும் கம்பியால் இளவரசனை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றது.
இதனால் காயமடைந்த இளவரசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன், அவரது மனைவி சுடலி, மகன்கள் சந்துரு, மாதவன் ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். அவர்களுக்கும், இளவரசனுக்கும் இடத்தகராறு காரணமாக முன் விரோதம் இருந்தது. இதனால் ஏற்பட்ட தகராறில் இளவரசனை கத்தியால் குத்தியது தெரியவந்தது.