மும்பையில் மகளிர் பிரீமியர் லீக் டி 20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 10-வது லீக் ஆட்டத்தில் உபி வாரியர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. முதலில் டாஸ் வென்ற உபி வாரியர்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. கேப்டன் அலிசா ஹீலி 58 ரன்னும் தக்லியா மெஹ்ரத் 50 ரன்னும் எடுத்தனர்.

இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கியது. முதலில் களம் இறங்கிய யஸ்தீகா பாட்டியா 27 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். நட் சீவர் 45 ரன்னும் கவுர் 53 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்கின்றனர். தொடக்கம் முதல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் 17.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி தன்னுடைய 4-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் தொடங்கிய ஆண்டே தொடர்ந்து 4 வெற்றிகளை பெற்ற கேப்டன் தோனியின் சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்மன் ப்ரீத் சமன் செய்துள்ளார். அடுத்த போட்டியில் ஹர்மன் வென்றால் இந்த சாதனை முறியடிக்கப்படும். கடந்த 2007-ம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கிய போது எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து 4 வெற்றிகளை பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.