
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ரேவா மாவட்டத்தில் சிவபிரகாஷ் திரிபாதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக பிரியா சர்மா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இதில் பிரியாவுக்கு வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ள நிலையில் இந்த விவகாரம் அவருடைய கணவருக்கு தெரியவந்தது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இந்நிலையில் சிவபிரகாஷுக்கு திடீரென ஒரு விபத்து ஏற்பட்டதால் அதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு நடக்க முடியாத நிலையில் இருந்தார்.

அந்த சமயத்தில் அவருடைய மனைவி அவரை பிரிந்து சென்று விட்டார் .இதனால் மன உளைச்சலில் இருந்து சிவபிரகாஷ் கடந்த 16ஆம் தேதி இன்ஸ்டாகிராம் லைவில் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொள்வதை அவருடைய மனைவியும் மாமியாரும் நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட44 நிமிடங்கள் அவர் இன்ஸ்டாகிராமில் லைவில் வீடியோ போட்டு தற்கொலை செய்த நிலையில் அதனை தடுக்க முயற்சிக்காமல் அவருடைய மனைவியும் மாமியாரும் செல்போனில் வேடிக்கை பார்த்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தற்போது அவருடைய மாமியார் மற்றும் மனைவியை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.