
தென்னிந்திய சினிமாவில் 20 வருடங்களாக முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் நடிகை திரிஷா. இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். அந்த பின் பொன்னியின் செல்வன் 2 விலும் நடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து நடிகை திரிஷா கர்ஜனை, ராங்கி மற்றும் சதுரங்க வேட்டை 2 போன்ற திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் விஜயின் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இதில் அந்த படத்தின் நடிகர் விக்ரம், கார்த்திக் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட த்ரிஷா கொள்ளை அழகில் மினுமினுக்கும் என்ற சேலையில் மின்னுகிறார். தற்போது இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இதை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் 40 வயதில் இப்படி ஒரு அழகா? என்று த்ரிஷாவின் அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
#PS2 Promotions – Delhi#Trisha #SouthQueenTrisha pic.twitter.com/1lWGeU0ByR
— Trisha Krishnan FC (@ActressTrisha) April 18, 2023