உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் ஹரிஷ் பட்டேல் இவரது மனைவிக்கு சமீபத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில் குழந்தை பிறந்துள்ளது. இது ஹாரிஸ் பட்டேலுக்கு ஆறாவது குழந்தையாகும்.

இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து மனைவி மற்றும் குழந்தையை டிஸ்சார்ஜ் செய்ய வேண்டிய சூழலில் 4000 ரூபாய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டி இருந்துள்ளது. ஆனால் ஹரிஷ் பட்டேல் பணத்திற்கு திண்டாடியுள்ளார்.

இதை புரிந்து கொண்ட ஒரு கும்பல் ஹரிஷ் பட்டேலின் மூன்று வயது மகனை 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்குமாறு வற்புறுத்தியுள்ளனர். இல்லையென்றால் மனைவி மற்றும் புதிதாக பிறந்த குழந்தையை மருத்துவமனையில் இருந்து அனுப்ப மாட்டோம் என்றும் மிரட்டியுள்ளனர்.

இதனால் ஹரிஷ் பட்டேல் மகனை விற்க சம்மதித்துள்ளார். ஆனால் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைக்க சம்பவ இடத்திற்கு விரைந்தவர்கள் ஐந்து பேர் கொண்ட கும்பலை கைது செய்து மூன்று வயது மகனை ஹரிஷ் பட்டேலிடமே ஒப்படைத்தனர்.