உத்திரபிரதேசத்தில் இருந்து சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோ பார்ப்போரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

 

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் ஒரு நபர் தனக்கு நீதி வேண்டும் என்று காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி (SHO) சுதாகர் காஷ்யப், நீதி கேட்டு காவல் நிலையத்திற்கு வந்தவரை தொடர்ந்து அறைந்ததாகக் கூறப்படுகிறது.

SHO-வின் இந்த கொடூர செயல் காணொளியாக சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. SHO அந்த நபரை 41 வினாடிகளில் 31 முறை அறைந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் வீடியோ வைரலானதை அடுத்து, SHO சுதாகர் காஷ்யப் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.