உலகின் மிகப் பழமையான நெருப்புக்கோழியின் கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல கோடி வருடங்களுக்கு முன்பான உருவான இந்த பூமி மனிதர்கள் உருவாகி வெறும் சில லட்சம் வருடங்களே ஆகியிருக்கிறது. ஆனால் நெருப்புக்கோழிகள் 2 கோடி வருடத்திற்கு முன்னரே பூமியில் வாழ்ந்து வருவதாக ஆய்வுகள் கூறுகிறது. இந்த நிலையில் சுமார் 41,000 ஆண்டுகளுக்கு முந்தைய நெருப்புக்கோழியின் கூடு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது வரலாற்று ஆய்வாளர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது .

இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில் இதுவே பழமையானது என்றும் கூறப்படுகிறது. இந்த காலத்தில் நெருப்புக்கோழிகளின் கூடுகள் ஒன்பது முதல் 10 அடி விட்டம் கொண்டதாக இருக்கிறது. இதில் 30 முதல் 40 முட்டைகள் அடைகாக்கப்படும். ஆனால் ஆந்திராவில் கண்டுபிடிக்கப்பட்ட கூடுகள் மிகப்பெரியதாக இருந்தது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த கூடானது சர்வதேச தொல்லியல் ஆய்வாளர்களுடைய கவனத்தை இந்தியாவை நோக்கி திருப்பி உள்ளது.