மாதவன் நடித்த ரன் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர்தான் நடிகை மீரா ஜாஸ்மின். இவருடைய உண்மையான பெயர் ஜாஸ்மின் மேரி ஜோசப். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளார். மலையாள படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றுள்ளார்.

இவர் நடித்த ஒரு சில படங்கள் மட்டும் தான் தோல்வி அடைந்தது மற்ற படங்கள் எல்லாமே நல்ல ஹிட் அடித்துள்ளது. இவர் கடந்த 2014ஆம் வருடம் அனில் ஜான் டைட்டஸ்  என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் மீரா ஜாஸ்மின் இன்று தன்னுடைய நாற்பத்தி மூன்றாவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அவருடைய சொத்து மதிப்பு 50 கோடி முதல் 60 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.