கென்யாவில் உள்ள ஷகாஹோலா காட்டில் நடந்த சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. ‘குட் நியூஸ்’ இன்டர்நேஷனல் சர்ச் என்ற பெயரில் செயல்பட்டு வந்த ஒரு தேவாலயத்தில், பாதிரியார் பால் மெக்கன்சி தலைமையில் நடந்த கொடூரச் சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த தேவாலயத்தில் பக்தர்களிடம் ஏசுவை காண்பிப்பதாக கூறி பலரை உண்ணா நோன்பு இருக்க வைத்து கொன்றுள்ளனர். இதுவரை 436 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் 191 பேர் குழந்தைகள் என்பது மிகவும் வேதனையான செய்தி.  தற்போது சுமார் 800 ஏக்கர் பரப்பளவிலான காடுகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து தோன்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அந்த பகுதியில் 600க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டதால் இன்னும் உடல்கள் கிடைக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அதாவது முதலில் இயேசுவை பார்க்கலாம் என ஆர்வத்தை தூண்டி பின்னர் பரலோகம் அனுப்பி வைக்கிறேன் என்று மக்களிடம் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அவர்களை பட்டினியாக இருக்க வைத்து கொலை செய்துள்ளார். இறந்தவர்களின் உடலை அங்கேயே தோண்டி புதைத்துள்ளார். இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில் பால் மெக்கன்சி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இது உலகின் மிக மோசமான வழிபாட்டு படுகொலை சம்பவம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.