
பெங்களூருவில் மேட்ரிமோனியில் பதிவு செய்த மணமகனுக்கு வரன் தேடி தராததால் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மேட்ரிமோனி நிறுவனத்திற்கு தற்போது அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர். அதாவது விஜயகுமார் என்பவர் Dilimil matrimony-யில் வரன் தேடி பதிவு செய்தார். இதற்கு கட்டணமாக அவர் 30,000 வரையில் செலுத்தினார். ஆனால் பல நாட்கள் ஆகியும் அவர்கள் வரன் தேடாததோடு இது பற்றி கேட்டால் முறையாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அதாவது 45 நாட்களுக்குள் வரன் தேடி தருவதாக அவர்கள் கூறிய நிலையில் சொன்னதை செய்யவில்லை. இதனால் மனவேதனை அடைந்த விஜயகுமார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் சம்பந்தப்பட்ட மேட்ரிமோனிக்கு நீதிமன்றம் 60 ஆயிரம் ரூபாய் வரையில் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.