
சிவகங்கை மாவட்டத்தில் சேகர்- செல்வராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். சேகர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். செல்வராணி சிவகங்கை மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்க்கிறார். இந்த தம்பதியினருக்கு விஸ்வநாதன் (10) என்ற மகன் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த சேகர் தனது மகனுக்கு காது குத்து விழா நடத்த முடிவு செய்தார். நேற்று உறவினர்கள் முன்னிலையில் காதுகுத்து நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது விஸ்வநாதன் தனது தந்தைக்கும் தன்னை போலவே காது குத்த வேண்டும் என அடம்பிடித்தார். அதனை ஏற்றுக்கொண்டு சேகர் மகனின் ஆசை நிறைவேற்றுவதற்காக மேடையிலேயே காதுகுத்திக் கொண்டார். 45 வயதான சேகர் தனது தாய் மாமா அருகே அமர்ந்து இரண்டாவது முறையாக காதுகுத்தி கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.