கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் குமார் என்பவர் கடந்த மாதம் 27ஆம் தேதி அதிகமாக மது குடித்ததால் உயிரிழந்ததார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் சுரேஷ்குமாரின் கழுத்து மற்றும் தலையில் காயங்கள் இருப்பது தெரிய வந்ததால் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவருடைய மகள் ஆர்த்தியிடம் (21) காவல்துறையினர் விசாரணை நடத்தினர்‌. அப்போது தன்னுடைய தந்தை அதிகமாக மது கொடுத்துவிட்டு வந்து தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதால் அவரை கொலை செய்ததாக ஆர்த்தி கூறினார்.

ஆனால் ஒரு பெண்ணால் இந்த கொலையை செய்ய முடியாது என போலீசார் சந்தேகித்த  நிலையில் ஆர்த்தையின் செல்போனை ஆராய்ந்துள்ளனர். அப்போது அவருக்கு ஏராளமான ஆண் நண்பர்களுடன் பழக்கம் இருந்தது தெரியவந்தது. அதோடு சுரேஷ்பாபு (47) என்பவர் அடிக்கடி ஆர்த்தியிடம் பேசியது தெரிய வந்த நிலையில் அவரிடம் கிடுக்கு பிடி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது சுரேஷ்குமாரின் நண்பர் சுரேஷ் பாபு என்பது தெரிய வந்துள்ளது.

இருவருக்கும் மது குடிக்கும் பழக்கம் இருந்த நிலையில் சுரேஷ்குமார் தன்னுடைய வீட்டிற்கு அவரை அழைத்து வந்து மது அருந்தியுள்ளார். சுரேஷ்குமார் மது போதையில் தூங்கிய பிறகு ஆர்த்தி சுரேஷ் பாபுவுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதை ஒருநாள் பார்த்த சுரேஷ்குமார் இருவரையும் கண்டித்துள்ளார். அப்போது சுரேஷ் பாபு ஆத்திரத்தில் சுரேஷ்குமாரை கீழே தள்ளி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

அதன் பிறகு ஆர்த்தியிடம் தந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டால் ஜெயிலில் இருந்து வெளியே வந்த பிறகு திருமணம் செய்து கொள்வதாக சுரேஷ்பாபு கூறியுள்ளார். இதனையடுத்து தான் ஆர்த்தி தன் தந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் சுரேஷ்பாபுவுக்கு ஏற்கனவே 3 முறை திருமணமான நிலையில் அவருக்கு 3 குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் ஆர்த்தி மற்றும் சுரேஷ்பாபு இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.