ஹைதராபாத் மாசா போலாரத்தில் உள்ள இந்திஸ் VB சிட்டி எனும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள பார்கிங் பகுதியில் வன்கொடுமையான செயல் ஒன்று நடந்துள்ளது. ஏப்ரல் 14ஆம் தேதி, அங்கு வசித்து வரும் தொழிலதிபர் ஆஷிஷ் என்பவர், இரண்டு மாதங்கள் மட்டுமே ஆன ஐந்து தெரு நாய்க்குட்டிகளை சுவரில் அடித்து, காலால் மிதித்து கொலை செய்துள்ளார். இந்த கொடூரச் செயல், அந்த குடியிருப்பில் நிறுவப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த நாள், குடியிருப்பாளர்கள் நாய்க் குட்டிகள் இறந்த நிலையில் காணப்பட்டதை கவனித்து, சிசிடிவி காட்சிகளைப் பார்த்துள்ளனர். அதில் ஆஷிஷ் தன் செயலை முழுமையாக ஒப்புக்கொண்டதும், stray நாய்களை வெறுக்கிறேன் என்பதற்காகவே இந்த செயலை செய்ததாகவும் கூறியுள்ளார். இதுதொடர்பாக குடியிருப்பாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், அல்வால் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தி வருகிறது.