
5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.
5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள 200 சட்டப்பேரவை தொகுதிகளில் நவம்பர் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளில் நவம்பர் 30ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள 230 சட்டப்பேரவை தொகுதிகளில் நவம்பர் 17ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 சட்டப்பேரவை தொகுதிகளில் நவம்பர் 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சத்தீஸ்கரில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளில் 2 கட்டங்களாக வாக்கு பதிவு நடைபெறுகிறது. அதாவது, 20 தொகுதிகளுக்கு நவம்பர் 7ஆம் தேதியும், மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு 17 ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து மாநில தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் வரும் டிசம்பர் 3ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார்
மத்திய பிரதேசம் மாநில தேர்தல் :
வாக்குப்பதிவு – நவம்பர் 17
வாக்கு எண்ணிக்கை – டிசம்பர் 3
மனு தாக்கல் தொடக்கம் – அக்டோபர் 21
மனு தாக்கல் முடிவு – அக்டோபர் 30
வேட்பு மனு பரிசீலனை – அக்டோபர் 31
வேட்பு மனு திரும்ப பெற – நவம்பர் 2
மிசோரம் தேர்தல் :
வாக்குப்பதிவு – நவம்பர் 7
வாக்கு எண்ணிக்கை – டிசம்பர் 3
மனு தாக்கல் தொடக்கம் – அக்டோபர் 13
மனு தாக்கல் முடிவு – அக்டோபர் 20
வேட்புமனு பரிசீலனை – அக்டோபர் 21
வேட்பு மனு திரும்ப பெற – அக்டோபர் 23
சத்தீஸ்கர் முதல் கட்ட தேர்தல் :
வாக்குப்பதிவு – நவம்பர் 7
வாக்கு எண்ணிக்கை – டிசம்பர் 3
மனு தாக்கல் தொடக்கம் – அக்டோபர் 13
மனு தாக்கல் முடிவு – அக்டோபர் 20
வேட்பு மனு பரிசீலனை – அக்டோபர் 21
வேட்பு மனு திரும்ப பெற – அக்டோபர் 23
சத்தீஸ்கர் இரண்டாம் கட்ட தேர்தல் :
வாக்குப்பதிவு – நவம்பர் 17
வாக்கு எண்ணிக்கை – டிசம்பர் 3
மனு தாக்கல் தொடக்கம் – அக்டோபர் 21
மனு தாக்கல் முடிவு – அக்டோபர் 30
வேட்பு மனு பரிசீலனை – அக்டோபர் 31
வேட்பு மனு திரும்ப பெற – நவம்பர் 2
ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் :
வாக்குப்பதிவு – நவம்பர் 23
வாக்கு எண்ணிக்கை – டிசம்பர் 3
மனு தாக்கல் தொடக்கம் – அக்டோபர் 30
மனு தாக்கல் முடிவு – நவம்பர் 6
வேட்பு மனு பரிசீலனை – நவம்பர் 7
வேட்பு மனு திரும்ப பெற – நவம்பர் 9
தெலுங்கானா மாநிலத் தேர்தல் :
வாக்குப்பதிவு – நவம்பர் 30
வாக்கு எண்ணிக்கை – டிசம்பர் 3
மனு தாக்கல் ஆரம்பம் – நவம்பர் 3
மனு தாக்கல் முடிவு – நவம்பர் 10
வேட்பு மனு பரிசீலனை – நவம்பர் 13
வேட்பு மனு திரும்ப பெற – நவம்பர் 15
தேர்தல் நடக்கும் தெலுங்கானா, மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்துள்ளது.