விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டி.நல்லாளம் பகுதியில் மகேந்திரன் (42) என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளி. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு 5-ம் வகுப்பு படித்து வந்த 10 வயதுடைய சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த சிறுமியிடம் மகேந்திரன் மீன் பிடிக்க செல்லலாம் என்று கூறியுள்ளார். பின்னர் அந்த சிறுமியை ஒரு குட்டைக்கு அழைத்து சென்றார். அங்கு சிறுமியை ஒரு மறைவான இடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். அதோடு அந்த குட்டையில் மூழ்கடித்து சிறுமியை கொலை செய்துவிட்டு அங்கேயே உடலை போட்டு விட்டு சென்று விட்டார்.

இது தொடர்பாக சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் மகேந்திரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தற்போது விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அப்போது மகேந்திரன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதோடு அவருக்கு ரூ.8,000 அபராதமும் விதித்தார். இதைத்தொடர்ந்து அரசு தரப்பில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.8 லட்சம் அபராதம் வழங்க வேண்டும் என நீதிபதி கூறினார். மேலும் இதைத்தொடர்ந்து கடலூர் மத்திய சிறையில் மகேந்திரன் அடைக்கப்பட்டார்.