ஜாம் நகரில் உள்ள மோர்க்கண்டா கிராமத்தில் நவீன் சந்திர நகும் (46) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் அந்த கிராமத்தில் கணினி தொழில் முனைவோராக பணியாற்றி வருகிறார். இவர் 2 மணி நேரம் மட்டுமே வேலை பார்க்கும் நிலையில் ரூ.5 லஞ்சம் வாங்கி குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அதாவது பொதுவாக விவசாயிகளிடமிருந்து ஒரு ஆவணத்திற்கு ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படும். இதில் ரூ‌.3 நவீனுக்கும், ரூ.2 அரசாங்க கட்டணமாகவும் செலுத்தப்படுகிறது. ஆனால் நவீன் விவசாயிகளிடமிருந்து ரூ.10 கட்டணமாக பெற்றுள்ளார். இதில் ரூ.5-ஐ அவர் லஞ்சமாகப் பெற்றுள்ளார். இது குறித்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு துறை நவீனை கையும் களவுமாக பிடித்தனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.