
மதுரை மாவட்டத்தில் உள்ள திருநகர் பகுதியில் வினோத் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் குழந்தைக்கு உடல்நலம் சரியில்லை. இதன் காரணமாக குழந்தையின் பாட்டி ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். அப்போது வட மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் அவர்களை பின்தொடர்ந்து நோட்டமிட்டு சென்றார்.
அவர் அந்த பாட்டி இல்லாத நேரத்தில் குழந்தையை தூக்கிக்கொண்டு ஒரு ஆட்டோவில் ஏறி தப்பி ஓட முயன்றார். ஆனால் அந்த சமயத்தில் குழந்தை கத்தி கூச்சலிட்டது. இதனால் ஆட்டோ ஓட்டுனர் சுதாகரித்துக் கொண்டு அக்கம் பக்கத்தினர் உதவியோடு அந்த வாலிபரை பிடித்தார். பின்னர் குழந்தையை மீட்டு அவர் பாட்டுயிடம் கொடுத்தார். மேலும் அந்த வாலிபரை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.