உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நொய்டாவில் உஜ்வால் கிஷோர் மற்றும்  நீலு ஸ்ரீ வஸ்தவா என்ற    தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்கள் வெளிநாட்டின் நிதி உதவியோடு ஒரு தம்பதி கிட்டத்தட்ட 5 வருடங்களாக ஆபாச படம் எடுக்கும் தொழிலை செய்து வந்துள்ளனர். இந்த மிகப்பெரிய மோசடியை தற்போது அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது. இந்நிலையில் அந்த தம்பதியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அந்த சோதனையின் போது 15.66 கோடி ரூபாய் வெளிநாட்டு சட்ட விரோத நிதியை கண்டுபிடித்தனர்.

அதன் பிறகு நடத்திய விசாரணையில் அந்த தம்பதி மாடலிங் செய்ய விரும்பும் பெண்களை சமூக வலைதளம் மூலம் குறி வைத்துள்ளனர். பின்னர் அவர்களை மாடலிங் செய்ய வைப்பதாக கூறி அதிக பணம் கொடுத்து பின்னர் ஆபாச பட தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர். முதலில் இந்த தொழிலை ரஷ்யாவில் செய்த நிலையில் தற்போது இந்தியாவில் செய்துள்ளனர். இந்த மோசடியில் கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான பெண்கள் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் அந்த தம்பதியை தற்போது அமலாக்கத்துறை கைது செய்த நிலையில் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.