தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கரீம் நகரில் வசித்து வருபவர் ராஜசேகர். இவர் கங்காதாரா நலப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். ராஜசேகர் தொடர்ந்து அரசு தேர்வுகளுக்கு பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் அரசு தேர்வுகளை எழுதி வந்தவர் ஒரே நேரத்தில் 5 அரசு வேலைகளை பெற்று அசத்தியுள்ளார். TGT, PGT, group 4, TGPSC,  junior lecturer ஆகிய அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, ஒவ்வொரு தேர்வையும் முழு மனதோடு முதல் தேர்வு போல எழுதினால் எல்லா தேர்வுகளிலும் நிச்சயமாக வெற்றி பெற முடியும். அனைத்து தேர்வுகளும் சவாலாக நினைத்து எழுதினால் எதுவும் சாத்தியமே எனக் கூறியுள்ளார். ஒரே நேரத்தில் 5 அரசு வேலை பெற்ற அரசு ஆசிரியர் என பலராலும் பாராட்டப்பட்டு வருகிறார்.