இனிமேல் நீங்கள் பாஸ்போர்ட்டை பெறுவதற்கு போலீஸ் வெரிபிகேஷனுக்காக நீண்ட நாட்கள் காத்திருக்கவேண்டாம். ஏனெனில் வெறும் 5 நாட்களில் அனைத்து செயல்முறைகளும் முடிந்து விடும். இந்திய குடிமக்களுக்கு பாஸ்போர்ட் வழங்குவதற்குரிய போலீஸ் சரிபார்ப்பு செயல்முறையை சீராக்கவும், விரைவுபடுத்தவும் “mPassport Police App”-ஐ வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று (பிப். 17) அறிமுகப்படுத்தியது.

இனி இச்செயலி போலீஸ் சரிபார்ப்பு மற்றும் சமர்பிப்பு அறிக்கையின் முழு செயல்முறையையும் காகிதமற்றதாக மாற்றும் என வெளிவிவகார அமைச்சகத்தின் டெல்லியிலுள்ள பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகம்(RPO) நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி RPO வெளியிட்ட டுவிட்டில், இந்த அலுவலகம் திறமையான சேவை வழங்கல் மற்றும் டிஜிட்டல் இந்தியாவுக்காக உறுதிபூண்டிருக்கிறது. இந்த செயலி போலீஸ் சரிபார்ப்பு நேரத்தை 5 நாட்களாக குறைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.