திரை உலகின் பிரபல நடிகரான அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. இந்த இரண்டாம் பாகம் டிசம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. டிசம்பர் 5 முதல் இன்று வரை 50 நாட்களைக் கடந்து புஷ்பா 2 படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

அதோடு இந்த படம் 1900 கோடி வசூல் செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் தெலுங்கு திரை உலகில் பிரபாஸுக்கு அடுத்ததாக அதிக வசூலை பெற்ற நடிகராக அல்லு அர்ஜுன் திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.