பாலிவுட் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளராக இருப்பவர் போனி கபூர். இவர் தமிழில அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை மற்றும் துணிவு உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் ஆவார். இந்நிலையில் தயாரிப்பாளர் போனி கபூருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் அவர் இரண்டாவதாக ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு முதல் மனைவி மூலம் அர்ஜுன் கபூர் என்ற மகன் இருக்கும் நிலையில் அவர் பாலிவுட் சினிமாவில் நடித்து வருகிறார். இவர் 50 வயதாகும் நடிகை மலைக்கா அரோராவை காதலித்து வருகிறார்.

இதில் மலைக்காவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தான நிலையில் 20 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இவரை விட அர்ஜுன் கபூர் 12 வயது சிறியவர். இவர்களுடைய காதலுக்கு போனி கபூர் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்தபோதும் இருவரும் உறுதியாக இருக்கிறார்கள். இந்நிலையில் அர்ஜுன் கபூர் மற்றும் மலைக்கா அரோரா இருவரும் பிரிந்து விட்டதாக சமீபத்தில் தகவல்கள் பரவியது. இந்நிலையில் தற்போது நடிகர் அர்ஜுன் கபூர் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் வாழ்க்கையில் நமக்கு இரண்டு தேர்வுகள் இருக்கிறது. அதில் நமது கடந்த காலத்தின் கைதிகளாகவோ அல்லது எதிர்கால சாத்தியக்கூறுகளை ஆராய்வோராகவோ இருக்கலாம். மேலும் இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.