நாடாளுமன்றத்தில் அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட்டு 75 வருடங்கள் நிறைவடைந்ததை எடுத்து பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு உரையாற்றுகிறார். அப்போது 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறும் என்று கூறிய அவர் பெண்களுக்கு முதலில் அரசியலமைப்பில் அதிகாரம் வழங்கியது இந்தியா தான் என்றும் அனைத்து விதமான முக்கிய திட்டங்களும் நாட்டில் பெண்களை மையப்படுத்தி கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்காவிடில் நாடு முன்னேறாது என்றும் உலக அளவில் ஜனநாயகத்தின் தாயாக இந்தியா திகழ்கிறது என்றும் கூறினார்.

அதன்பிறகு எமர்ஜென்சி காலத்தின் போது இந்தியாவின் உரிமைகள் சூறையாடப்பட்டது என்று கூறினார். அந்த சமயத்தில் நாடு சிறைச்சாலையாக மாறியது. காங்கிரஸின் இந்த பாவத்தை ஒருபோதும் துடைக்க முடியாது என்றார். அதன்பிறகு இந்தியாவில் 50 வருடங்களாக கிட்டத்தட்ட ஒரே குடும்பம் தான் ஆட்சி செய்துள்ளது. அரசியலமைப்பு சட்டம் மட்டும் இல்லை என்றால் என்னை போன்றவர்கள் இந்த இடத்தில் நின்று கொண்டு பேசிக்கொண்டிருக்க முடியாது என்றார். மேலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் மட்டும்தான் கிட்டத்தட்ட 50 வருடங்களாக நாட்டை ஆட்சி செய்தனர் என்று கூறினார்.